விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காளைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லுரி மாணவர்கள் பொதுமக்கள் என பெரும்பாலானோர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மகாராஜபுறம் சாலையில் காளைகளுடன் திரண்ட சுமார் 3௦௦ க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.