‘போதிய பேருந்து இல்லை’- படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

‘போதிய பேருந்து இல்லை’- படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்
‘போதிய பேருந்து இல்லை’- படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் போதிய பேருந்து வசதியில்லாததால் ஆபத்தான முறையில் பேருந்தில் தொங்கியபடி பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் அரசுப் பேருந்தில், இன்று காலை மாணவர்கள் பேருந்தில் நிற்க கூட இடம் இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு உயிரை பணயம் வைத்து பயணம் செய்தனர்.

படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் இவர்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது உரசி விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், பேருந்து வளைவுகளில் திரும்பும்போது மின்கம்பத்தில் மோதி விபத்தை சந்திக்கும் வகையில் பயணம் செய்தனர். பள்ளி. கல்லூரி நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததே மாணவர்கள் இது போன்று ஆபத்தான வகையில் பயணம் செய்ய காரணம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com