திருவள்ளூரில் பள்ளிக்கு பெற்றொரை அழைத்து வர சொன்னதால் இரு மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்த உமாபதி மற்றும் கிரண் ஆகிய இருவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அந்த இரு மாணவர்களும் பள்ளிக்கு சரியாக வராததாலும், சரிவர படிக்காமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரை அழைத்துவரச் சொல்லியிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு கிளம்பிச் சென்ற மாணவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியிருக்கின்றனர். மாணவர்கள்
இருவரும் கிடைக்காத நிலையில், காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். அதில், உமாபதி என்ற மாணவர் வீட்டிலிருந்து 2
ஆயிரம் ரூபாயும் மாற்று உடையும், சஞ்சய் மாற்று உடையை மட்டும் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. காவல்துறையினர்
மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.