சாலை இல்லாமல் வனப்பகுதிக்குள் செல்லும் பள்ளி மாணவர்கள்

சாலை இல்லாமல் வனப்பகுதிக்குள் செல்லும் பள்ளி மாணவர்கள்

சாலை இல்லாமல் வனப்பகுதிக்குள் செல்லும் பள்ளி மாணவர்கள்
Published on

கிராமத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் வனப்பகுதிக்குள் சுற்றிக்கொண்டு பள்ளிக்கு வரவேண்டியுள்ளதாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பூம்பாறை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆறு கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. பள்ளிக்கு செல்ல ஆறு கிலோ மீட்டர் மன்னவனூர் நெடுஞ்சாலை வழியாக பயணித்து வர வேண்டி உள்ளதாகவும், பள்ளி நேரத்திற்கு அரசுப் பேருந்து இல்லாததால், அரசு இலவச பயண அட்டை இருந்தும், தனியார் பேருந்தில் கட்டணம் செலுத்தி வரவேண்டியிருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். இந்த நிலையை போக்க கிராமத்தில் இருந்து தோட்டங்களின் வழியாக கிராம உட்சாலை அமைத்து கொடுத்தால், பத்து நிமிடத்தில் நடந்தே பள்ளிக்கு வரலாம் என தீர்வும் கூறுகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோட்டாட்சியர் மோகனிடம் கேட்டதற்கு, பூம்பாறை கிராமத்தில் ஆய்வு செய்து சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com