மாநகரப் பேருந்து ஓட்டுநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் : மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

மாநகரப் பேருந்து ஓட்டுநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் : மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்
மாநகரப் பேருந்து ஓட்டுநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் : மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

சென்னை ஓட்டேரியில் பேருந்து நடத்துனர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மாநகரப் பேருந்துகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

29 A பேருந்து அண்ணா சதுக்கத்திலிருந்து பெரம்பூர் சென்றபோது புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அதில் ஏறி படிக்கட்டில் நின்றபடி வந்துள்ளனர். மேலும் தாளம் போட்டபடியும் வந்ததால், அவர்களை உள்ளே வருமாறு ஓட்டுநர் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் ஓட்டுநரை தாக்கியதுடன் அவர் மீது கல்லை எறிந்து விட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மேலும் சில மாநகரப் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாநகரப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் பேசி, தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மாநகரப் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்கியதால் போக்குவரத்து சீரானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com