அரியலூர்: செல்போன் காணாமல் போனதால் மனமுடைந்த பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு

அரியலூர்: செல்போன் காணாமல் போனதால் மனமுடைந்த பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு

அரியலூர்: செல்போன் காணாமல் போனதால் மனமுடைந்த பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு
Published on

அரியலூர் மாவட்டம் இலந்தைகுடம் கிராமத்தில் செல்போனை தொலைத்த மனவருத்தத்தில் பெற்றோர்கள் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் பள்ளி மாணவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது பதினாறு வயது மகன் நிஷாந்த் கடந்தவருடம் 10ஆம் வகுப்பை செம்பியகுடி பள்ளியில் முடித்துவிட்டு இவ்வருடம் இலந்தைகுடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிப்பில் சேர்ந்துள்ளார். கொரோனா தொற்றுக்காரணமாக வீட்டிலேயே செல்போனில் படித்துவந்த நிஷாந்த் தற்போது கடந்த ஒருமாதமாக பள்ளிக்கு சென்று வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்ற நிஷாந்த் வகுப்பிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அருகில் உள்ள கடைஒன்றில் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார்.

சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது செல்போன் அங்கே இல்லை. பல இடங்களில் தேடியும் செல்போன் கிடைக்காததால் மனமுடைந்து பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் நிஷாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது பெற்றோர்கள் வயலுக்கு சென்றிருந்த நிலையில் அங்குசென்று தனது தாயாரிடம் வீட்டுச்சாவியை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்த நிஷாந்த், செல்போன் காணாத மனநிலையிலேயே அச்சத்துடன் இருந்துள்ளார். பின்னர் நிஷாந்த் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடிவந்து நிஷாந்தி காப்பாற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே நிஷாந்த் உயிரிழந்துள்ளார். வெங்கனூர் போலீசார் இந்நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் காணாமல் போனதால் மனமுடைந்த பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அக்கிராமத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com