தமிழ்நாடு
மாணவர்கள் இறந்த விவகாரம் - நெல்லை சாஃப்டர் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
மாணவர்கள் இறந்த விவகாரம் - நெல்லை சாஃப்டர் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
கழிவறை இடிந்து 3 மாணவர்கள் இறந்த நெல்லை சாஃப்டர் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தாளாளர், ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த சாஃப்டர் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கழிவறை சுவர் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடிந்த பள்ளியின் கழிவறையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
சாஃப்டர் பள்ளி வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, டிசம்பர் 26ஆம் தேதி வரை அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.