\
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?
Published on: 

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆறுபோல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதைத்தொடர்ந்து மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல மதுரையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மதுரை மாநகர் பகுதிகளான கோரிப்பாளையம், ஆரப்பாளையம், கே புதூர், அண்ணா நகர், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காலை முதல் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com