தொடர்மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் 40 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 11 சதவிகிதம் அதிக மழை கிடைத்துள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.