அதிவேகமாக திரும்பிய அரசுப் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி - பரிதாப உயிரிழப்பு

அதிவேகமாக திரும்பிய அரசுப் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி - பரிதாப உயிரிழப்பு

அதிவேகமாக திரும்பிய அரசுப் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி - பரிதாப உயிரிழப்பு
Published on

ஓசூர் அருகே அதிவேகமாக திரும்பிய அரசுப் பேருந்திற்குள் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி அக்‌ஷயா (12). தடிக்கல் கிராமத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் அரசுப் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அரசுப் பேருந்து அதிவேகத்துடன் வளைவில் திரும்பியதால், பேருந்தில் இருந்த மாணவி அக்‌ஷயா மற்றும் பயணி வீரேஷ் ஆகியோர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த மாணவி அக்‌ஷயா பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வீரேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியமான மற்றும் அதிவேக இயக்கத்தால் மாணவி இறந்த சம்பவம் மக்களிடையே சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com