பள்ளிக்கு சென்ற சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

பள்ளிக்கு சென்ற சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

பள்ளிக்கு சென்ற சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
Published on

கோவையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக பள்ளி சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவரது 6 வயது மகள் ஒருவர் பன்னிமடையை சேர்ந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். 

வழக்கமாக சிறுமி காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலை தானாகவே வீடு வந்து சேர்ந்துவிடுவார். இந்நிலையில், நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. அதனால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் கஸ்தூரி நாயக்கன் புதூர் என்கிற இடத்தில் கத்தியால் அறுபட்டு காயங்களோடு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பள்ளத்தில் பிணமாக கிடந்த சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கிடந்த சிறுமி சதீஸின் மகள் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com