தூத்துக்குடி முகநூல்
தமிழ்நாடு
தூத்துக்குடி | அதிகமான அரிசி சாப்பிட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்த பள்ளி மாணவி!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரிசி சாப்பிட்ட பள்ளி மாணவி, மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரிசி சாப்பிட்ட பள்ளி மாணவி, மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதனூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மாலதி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். எப்போதும் வென்றான் சுகாதார நிலையத்திலிருந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் அதிகமாக அரிசி சாப்பிட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.