''நவ.14 இரவு 7.30 - 8.30 வரை செல்ஃபோனை அணைத்து வையுங்கள்'' - பள்ளிக்கல்வித்துறை

''நவ.14 இரவு 7.30 - 8.30 வரை செல்ஃபோனை அணைத்து வையுங்கள்'' - பள்ளிக்கல்வித்துறை

''நவ.14 இரவு 7.30 - 8.30 வரை செல்ஃபோனை அணைத்து வையுங்கள்'' - பள்ளிக்கல்வித்துறை
Published on

வரும் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் அன்று இரவு ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை பெற்றோர் தங்கள் செல்போன்களை அணைத்து வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

செல்ஃபோனை அணைத்து வைக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் தத்தமது குழந்தைகளுடன் பெற்றோர் செலவளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. செல்ஃபோனை அணைத்து வைப்பது குறித்து பெற்றோருக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

‘மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள்’ என்ற பெயரிலான பரப்புரை இயக்கம் மூலம் பெற்றோர் மின்னணு சாதனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தமது பிள்ளைகள் மேல் நேரடி கவனம் செலுத்தும் விழிப்புணர்வு ஏற்படும் என்றும் அச்சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com