\
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
Published on

தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளன. இந்தியாவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்துவிட்டன. தொற்று நோய் பரவி வரும் சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது நடக்காத காரியம்.இதனால் சில மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் பேசி இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com