“நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்”  - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

“நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்” - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

“நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்” - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
Published on

தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 28ஆம் தேதிக்குள் பணியில் சேராமலிருந்தால் அந்த இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஏராளமான
நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பணிக்கு திரும்பிவிட்டால், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு மட்டும் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளது. 

மேலும் ஜனவரி 28 ஆம் தேதிக்குள் பணியில் சேராவிட்டால் அவர்களின் இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றில் தற்காலிக அசிரியர்கள் பணி நியமணம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது தங்கள் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எங்கே காலி பணியிடம் உள்ளதோ அங்கு தான் அவர்கள் பணி புரிய வேண்டும் எனவும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி ஆலுவலர் குறிப்பிடும் இடத்தில் தான் பணிபுரிய வேண்டும் எனவும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. 

நாளைக்குள் பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது எனவும் பள்ளிக்கல்வித்துறை தமது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com