\
பள்ளி மாணவர்களுக்குள் சண்டை.. பிளேடால் அறுத்ததால் 16 தையல்..!

பள்ளி மாணவர்களுக்குள் சண்டை.. பிளேடால் அறுத்ததால் 16 தையல்..!

பள்ளி மாணவர்களுக்குள் சண்டை.. பிளேடால் அறுத்ததால் 16 தையல்..!
Published on: 

பள்ளியில் இரு மாணவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பிளேடால் கை அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம், பாரதமாதா தெருவில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம்போல் இன்று உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் முத்து(15) மற்றும் கிருஷ்ணன்(15) ஆகிய இருவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணன் என்ற 10-ம் வகுப்பு மாணவன் சக மாணவன் முத்துவின் கையை பிளேடால் அறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மாணவர் முத்து கதறி அழுது உள்ளார். இதனைத்தொடர்ந்து முத்துவை ஆசிரியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கை அறுபட்ட பள்ளி மாணவருக்கு 16 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்துவின் தந்தை ஏழுமலை சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com