மரணத்துடன் விளையாடும் மாணவர்களின் பேருந்து பயணம் -  வீடியோ

மரணத்துடன் விளையாடும் மாணவர்களின் பேருந்து பயணம் -  வீடியோ

மரணத்துடன் விளையாடும் மாணவர்களின் பேருந்து பயணம் -  வீடியோ
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் காணொளி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேன்‌கனிக்கோட்டை- மேலூர் இடையே போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளில், அளவுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக,‌ பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. 

ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பயணித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 30 ஆம் எண் கொண்ட பேருந்து வீடியோ பார்ப்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. பொதுமக்களின் நலன்கருதி போதிய அளவிலான பேருந்துக்களை தேன்கனிக்கோட்டை - மேலூர் சாலையில் இயக்கிட அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com