50 ஆயிரம் பணத்தை அப்படியே ஒப்படைத்த பள்ளி சிறுவன்

50 ஆயிரம் பணத்தை அப்படியே ஒப்படைத்த பள்ளி சிறுவன்

50 ஆயிரம் பணத்தை அப்படியே ஒப்படைத்த பள்ளி சிறுவன்
Published on

அரசுப் பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு சிறுவர் ஒருவர் சாலையில் கிடந்த 50,000 ரூபாயை கண்டெடுத்து அதனை பாதுகாப்பாக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மனைவி அப்ரோஸ்பேகம். தம்பதியினருக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் முகமதுயாசின். இவர் சேமூரில் உள்ள அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற நேரத்தில் முகமதுயாசின் சாலையோரம் கிடந்த 50,000 ரூபாபை பார்த்துள்ளார். பின்னர் அதனை பத்திரமாக எடுத்துச் சென்று  அவர்கள் ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளார். ஆசிரியர் மூலம் அந்தப் பணம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் வசம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. பணத்தை பத்திரமாக சேர்க்க உதவிய சிறுவருக்கு காவலர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com