கேரம் விளையாடும்போது தகராறு: மாணவர் உயிரிழப்பு?

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்பழகன் என்பவரின் மகன் துரை சரவணன் (12). இவர் வஞ்சூர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
Durai Saravanan
Durai SaravananPT Mail

கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் மாணவன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்பழகன் என்பவரின் மகன் துரை சரவணன் (12). இவர் வஞ்சூர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் சுரேஷ் என்பவரின் மகன் (வசீகரன் (14)) ஆகிய இருவரும் சேனூரில் கேரம் போர்டு விளையாடி உள்ளனர். அப்போது வசீகரனுக்கும் துரை சரவணனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Durai Saravanan
Durai SaravananPT Mail

இதில் துரை சரவணன் வசீகரனை தாக்கியதாகவும் பதிலுக்கு வசீகரன் துரை சரவணனை திருப்பி தாக்கிய போது துரை சரவணன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இறந்த மாணவன் துரை சரவணன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டே விபரீதமாக மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com