\
கனமழை எதிரொலி : நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலி : நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலி : நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Published on: 

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வந்த நிலையில், இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவையில் நாளை மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com