சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக தரப்பில் க. அன்பழகன் மற்றும் பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 8-ல் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்ப்பு காலதாமதம் ஆவதாக கூறினார். அப்போது பதிலளித்த நீதிபதிகள், ஒரு வாரத்திற்கு பொறுத்திருக்குமாறு தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com