உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 5 விசாரணை!
உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தொடர்ந்த மனுவை டிசம்பர் 5ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது
உள்ளாட்சித் தேர்தல் மறுவரையறை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகவில்லை எனவும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரியும்திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் திமுக தொடர்ந்த மனுவை டிசம்பர் 5ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
கிராமப்புற ஊராட்சித் தேர்தலுக்கான தேதிகளை இன்று காலை தேர்தல் ஆணையர் அறிவித்தார். அதன்படி வேட்பு மனுத் தாக்கல் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. அதற்கும் ஒருநாள் முன்னதாகவே திமுக தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.