ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரா‌க அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது. 

நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். அத்துடன், 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்ப்பு அப்போலோ நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றையை விசாரணையின், ஆணையத்தின் விசாரணைக்கு தங்கள் மருத்துவர்கள் உரிய அளித்துவிட்ட நிலையிலும், அடிக்கடி மருத்துவர்களை விசாரணைக்கு அழைப்பதாக அப்போலோ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல், விசாரணைக்கு ஆஜராகவில்லையெனில் கைது செய்யநேரிடும் என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. அதில் ஒரு மருத்துவர் கூட இடம்பெறவில்லை என்றும் அப்போலோ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com