உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கும்: தேவநேயன் கருத்து

உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கும்: தேவநேயன் கருத்து
உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கும்: தேவநேயன் கருத்து

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாப்பதாக இருக்கும் என குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்து பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருமணம் ஆகி ஒராண்டிற்குள் அந்த பெண் இதுகுறித்து புகார் அளித்தால் அது பாலியாக வன்கொடுமையாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் பேசும்போது, “இது மிகவும் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. இந்தியாவில் உள்ள குழந்தைக்காக உருவாக்கப்பட்ட தேசிய கொள்கை 2013-ன் படி, 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கலாச்சார, மத ரீதியாக நடக்கும் அனைத்து விதமான வன்முறைகளையும் வன்முறையாக கருத வேண்டும் என தெளிவாக இருக்கிறது. அதனை தற்போதைய தீர்ப்பு உறுதி செய்யும் விதமாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாப்பதாக இருக்கும் என்பது எனது கருத்து” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com