\
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க இடைக்கால தடை

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க இடைக்கால தடை

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க இடைக்கால தடை
Published on

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நவோதயா பள்ளிகளை திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், நவோதயா பள்ளிகளை திறக்க போதிய இடவசதி இல்லாததால், அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அதனை ஏற்ற உச்சநீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com