பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - எஸ்.பி.ஐ-யில் துணை மேலாளர் பணி அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2 ஆயிரம் துணை மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SBI
SBIpt desk

இந்தப் பணிகளுக்காக இன்று முதல் (07.09.2023) வரும் 27.09.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் முதல்நிலை தேர்வு (Online Preliminary Examination) வரும் அக்டோபர் அல்லது நவம்பர் 2023-ல் நடைபெறும் என்றும் அதற்கான முடிவுகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

sbi
sbipt desk

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் 2023, அல்லது ஜனவரி 2024-ல் ஆன்லைன் முதன்மை தேர்வு (Online Main Examination) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு வரும் பிப்ரவரி அல்லது மார்ச் 2024-ல் இறுதி முடிவு வெளியிடப்படும் என தற்காலிக தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிகிரி முடித்த பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எஸ்பிஐ-யில் வேலை வாய்ப்பை பெற்றலாம். விண்ணப்பிக்க மறக்காதீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com