கொடநாடு திருப்பம்: தேடப்பட்ட குற்றவாளி சாலை விபத்தில் மரணம்
கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, போலீசாரால் தேடப்பட்டுவந்த நபர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
கொடநாட்டில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை தொடர்பாக, 5 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் கனகராஜ், ஆத்தூரில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு நெருக்கமானவரான சயானை போலீசார் தேடி வந்தனர். இந் நிலையில் இன்று காரில் தப்பிச் என்ற சயான் பாலகாட்டில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். சயானின் கார் மீது டேங்கர் லாரி மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடன் சென்ற அவர் மனைவி வினுப்பிரியா ஐந்து வயது குழந்தை நீலி ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கோவை மருத்துவமனைக்கு சயான் மாற்றப்பட்டுள்ளார்.