“புகார்கள் இன்றி சுமூகமாக நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை” - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

“தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருகிறது. எந்த விதமான புகாரும் இதுவரை வரவில்லை” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார் .
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முகநூல்

செய்தியாளர்: V.சுப்பையா

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... “இன்று காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த விதமான புகாரும் வரவில்லை.

Vote counting
Vote countingFile image

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பிறகு விலக்கிக் கொள்ளப்படும்” என்றார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
“கோயம்புத்தூரில் திமுக டெப்பாசிட் கூட வாங்காது” - என்ற அண்ணாமலையின் பேச்சை தவிடுபொடியாக்கிய திமுக!

தொடர்ந்து, திருநெல்வேலி தபால் வாக்குகள் செல்லாது என்று அறிவித்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது போன்ற புகார்களில் அந்தந்த நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com