சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு
Published on

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 

சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12 ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதுதொடர்பாக பட்டாசு ஆலை குத்தகைக்காரர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை ஏற்கெனவே போலீசார் கைது செய்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலா (30) என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணிற்கு 12 வயதில் குரு தர்ஷினி என்ற பெண் பிள்ளையும், 10 வயதில் ஜோதி லட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com