\
சாத்தான்குளம் சம்பவம்: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்- ஹெச்.ராஜா

சாத்தான்குளம் சம்பவம்: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்- ஹெச்.ராஜா

சாத்தான்குளம் சம்பவம்: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்- ஹெச்.ராஜா
Published on

சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா பேசியதாவது “ ஆகஸ்ட் 15-க்குள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருவது நிச்சயம். அது உலக அரங்கில் பாராட்டப்படும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அமைச்சர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்த கேள்விக்கு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவரவர் விருப்பம் எனத் தெரிவித்தார். மேலும் “சாத்தான்குளம் சம்பவத்தை முதன்முதலில் கண்டித்தது பாஜகதான். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதால் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும். பிரதமர் அறிவித்த நபருக்கு 5 கிலோ அரிசி, பருப்பை தரமான முறையில் வழங்க சிவில் சப்ளை நடவடிக்கை எடுக்க வேண்டும்.”எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com