\
சாத்தான்குளம்: சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை- மதுரைக் கிளை கருத்து

சாத்தான்குளம்: சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை- மதுரைக் கிளை கருத்து

சாத்தான்குளம்: சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை- மதுரைக் கிளை கருத்து
Published on

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்கக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தது.

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்கக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தது. அப்போது அரசின் கொள்கை முடிவிற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com