“44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிரா மூலம் கண்காணிப்பு” - சத்யபிரதா சாகு தகவல்!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகுpt web

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19 ஆம் தேதி) மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்துக்கும் அதிக வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுமுகநூல்

தமிழ்நாட்டில் 3 கோடியே ஆறு லட்சத்துக்கும் அதிக ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 17லட்சத்துக்கும் அதிக பெண் வாக்காளர்களும், 8,467 மாற்று பாலினத்தவரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

சத்யபிரதா சாகு
“பரப்புரை ஓய்ந்தபின் சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை” - எச்சரித்த தேர்தல் ஆணையம்

இதுகுறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், “இத்தேர்தலையொட்டி தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 65% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

சத்யபிரதா சாகு
சத்யபிரதா சாகு

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் 18ம் தேதி (இன்று) மாலை 6 மணி வரை தபால் வாக்கு அளிக்கலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தங்களின் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.

சத்யபிரதா சாகு
ஆவடி மாநகர காவல் ஆணையரகம் சந்திக்கும் முதல் தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தபால் வாக்குகள் ஜுன் 3 ம் தேதி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பத்து வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு மண்டல அளவிலான குழு வீதம், 6170 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்ட்விட்டர்

தமிழகத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 1,297 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், போதை பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை தேர்தல் ஆணையத்தால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com