\
சாத்தான்குளம்: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன் நள்ளிரவில் கைது

சாத்தான்குளம்: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன் நள்ளிரவில் கைது

சாத்தான்குளம்: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன் நள்ளிரவில் கைது
Published on

விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில், தீவிர தேடுதலுக்குப் பின் சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மொத்தம் 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்.

ஆனால் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன்,காவலர் முத்துராஜ் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் தீவிர தேடுதலுக்கு பிறகு பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com