\
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா

4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா

4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
Published on

நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இதனிடையே அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 20-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை சார்பில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிடம் காலை 9 மணிக்கு காவல்துறையினர் ஆவணங்களில் கையொப்பம் வாங்குகின்றனர். அதன் பின்னர் 10.30 மணிக்கு விடுதலை செய்யப்பட இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com