சசிகலா அதிமுகவில் இணைய இபிஎஸ்-ஒபிஎஸ்சை சந்தித்து பேச வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்

சசிகலா அதிமுகவில் இணைய இபிஎஸ்-ஒபிஎஸ்சை சந்தித்து பேச வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்
சசிகலா அதிமுகவில் இணைய இபிஎஸ்-ஒபிஎஸ்சை சந்தித்து பேச வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்

அதிமுகவில் தற்போது வேகன்ஷி இல்லை எனவும் சசிகலா அதிமுகவில் இணைய வேண்டுமென்றால் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இருவரையும் சந்தித்து பேச வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி அதிமுகவினர் இன்று பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், மாஃபா பாண்டியராஜன் இல்லம் முன்பு பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகை ஏந்தி திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாஃபா பாண்டியராஜன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆர் தொடர்பான காட்சிகளின் சர்ச்சை குறித்த கேள்விக்கு, “குத்துச்சண்டைக்கு தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசியுள்ளார் பா.ரஞ்சித். நல்ல திரைப்படம், வரலாற்று ஆவணம். எம்ஜிஆர் பின்பற்றி வந்த இளைஞர்களை அசிங்கப்படுத்தும் படி இருப்பது தவறு. தவறான செயல் செய்யும் நபர் வீட்டில் எம்ஜிஆர் புகைப்படம் உள்ளது. இது விஷமத்தனமான செயல். ரஞ்சித் சிறந்த படைப்பாளி. அவர் இவ்வாரு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. எம்ஜிஆர் பற்றிய கருத்துக்கள் தேவையற்றது.

எம்ஜிஆர் செயல்களை மறைத்து திமுகவை சார்ந்து காட்சி படுத்தியுள்ளார். இதில் எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. திமுக அரசியல் படமாக எடுப்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் உண்மைக்கு புறம்பாக எம்ஜிஆர் குறித்து பேசியுள்ளது ஏற்கக்கூடிய இல்லை. இது ரஞ்சித் மனசாட்சிக்கு தெரியும். நல்ல கலைப்படைப்பு அரசியல் படுத்தப்பட்டது என்பது வருத்தம்” என்று கூறினார்.

திமுகவிற்கு மாற்று பாஜக என்ற அண்ணாமலையின் கருத்து குறித்து , “தமிழகத்தின் அரசியல் திமுக-அதிமுக என்ற அச்சில்தான் சுழலும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திமுகவிற்கு மாற்று பாஜகதான் என அக்கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாமலை பேசியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவின் வலிமை திமுகவிற்கே தெரியும். அதிமுக இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தலைமையில் உயிர்ப்புடன் இருக்கிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் திரணற்ற ஆட்சிக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள். அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

சசிகலா விவகாரம் குறித்த கேள்விக்கு, “கட்சியை மீட்டெடுக்க வேண்டும் எனக்கூறும் சசிகலா வார்த்தை தேவையற்றது. இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் நல்ல மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். அதிமுகவில் தற்போது vacancy இல்லை. சசிகலா அதிமுகவில் இணைய வேண்டுமென்றால் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இருவரையும் சந்தித்து பேசவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com