அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மலரையும் சசிகலா வெளியிட்டார். மலரை கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏராளமான அதிமுக தொண்டர்களும் அங்கு குழுமியிருந்தனர். பின்னர், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் சசிகலா வழங்கினார்.