\
ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா: போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அவரது தோழி சசிகலா செல்ல உள்ள நிலையில், அதற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சசிகலா செல்ல உள்ளதாகவும் அதற்கு அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சசிகலா சார்பில் முன்னாள் அதிமுக நிர்வாகியான வைத்தியநாதன் என்பவர் பெயரில் இம்மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலை ஆகியுள்ள சசிகலா தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில், அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வரும் சசிகலாவின் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com