அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். அவைத்தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுகவுக்கு துரோகம் செய்ததற்காக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை எவ்வித அதிகாரமும் இல்லாமல் நியமித்திருப்பது செல்லாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், மதுசூதனனின் அவைத்தலைவர் பதவி ஒரு கவுரவப் பதவி என்றும், அவருக்கு யாரையும் கட்சியை விட்டு நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார். இது போன்ற நடவடிக்கையைப் பார்த்தால் மதுசூதனன் மீது பரிதாபம்தான் வருகிறது என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.