தமிழ்நாடு
"ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு" ... தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
"ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு" ... தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
ஓபிஎஸ், இபிஎஸ் புகைப்படத்துடன் சசிகலா, டிடிவி தினகரன் புகைப்படங்களை சேர்த்து, இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு என வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், சிலர் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்களுடன் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் புகைப்படத்தை இணைத்து, இணைந்தால் பங்கு, இல்லையேல் சங்கு, ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால் கட்சியினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.