\
சசிகலா முதலமைச்சராக வேண்டும்:  தம்பிதுரை

சசிகலா முதலமைச்சராக வேண்டும்: தம்பிதுரை

சசிகலா முதலமைச்சராக வேண்டும்: தம்பிதுரை
Published on: 

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சி தலைமை ஒருவரிடமும், ஆட்சி தலைமை ஒருவரிடம் இருப்பது ஏற்புடையதல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவினர் மனநிலையை ஏற்று சசிகலா முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் அவரால் உடன்பிறவா சகோதரி என அழைக்கப்பட்டவருமான சசிகலா, கடந்த 31ம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com