\
“தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு

“தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு

“தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” - ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேச்சு
Published on

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என கிருஷ்ணகிரியில் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு சசிகலா சென்னை வந்துகொண்டிருக்கிறார். தற்போது கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே வந்து கொண்டிருக்கிறார். அங்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி சசிகலா பேசினார்.

மேலும், “விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com