கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அங்கு விரைந்துள்ளார்.
அதிமுக-வினர் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலும், சசிகலா தலையிலும் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். சசிகலா தரப்பிற்கு முதலில் ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏ-க்கள் தற்போது ஒவ்வொருவராக முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள அதிமுக எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா கூவத்தூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.