23 மணி நேர கார் பயணம்... சென்னை திரும்பினார் சசிகலா

23 மணி நேர கார் பயணம்... சென்னை திரும்பினார் சசிகலா

23 மணி நேர கார் பயணம்... சென்னை திரும்பினார் சசிகலா
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு காலம் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, சுமார் 23 மணி நேரம் கார் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பினார்.

4 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, பெங்களூருவில் உள்ள இல்லத்தில் ஒரு வார காலம் ஓய்வெடுத்தார். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 7.45 மணிக்கு சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். இரு மாநில எல்லையான ஜூஜூவாடி வழியே தொண்டர்களின் வரவேற்புக்கிடையே தமிழகத்தை அடைந்தார் சசிகலா.

ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களைக் கடந்து, பூவிருந்தவல்லி வழியே சசிகலா சென்னை சென்றார். முதலில் ராமாவரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் இல்லத்துக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், பல்வேறு பழங்களால் 15 அடி உயரத்தில் வடிவமைத்திருந்த 600 கிலோ எடையுள்ள மாலையுடன் வரவேற்றனர்.

எம்ஜிஆர் இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அடுத்து, அங்குள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்திற்கு சசிகலா சென்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com