“சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது” - கர்நாடகா உள்துறை அமைச்சர்

“சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது” - கர்நாடகா உள்துறை அமைச்சர்
“சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது” - கர்நாடகா உள்துறை அமைச்சர்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகையேதும் இல்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதியுடன் சிறைதண்டனை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர், சிறைத்துறை டி.ஐ.ஜியிடம் சசிகலாவின் நன்னடத்தை, சிறையினுள் கன்னடம் பயில்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு சிறையின் சிறப்பு விதிகளின் படி சசிகலாவை முன்னதாக சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர், சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பின்படியும், சிறைச்சாலை விதியின்படியும் மட்டுமே அவர் விடுதலை ஆவார் என்றும் கூறியுள்ளார்.  இதன் மூலம் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதிதான் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com