\
பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா எம்.பி

பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா எம்.பி

பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா எம்.பி
Published on: 

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அதிமுக மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் அண்மை காலமாக பாஜகவுக்கு ஆதரவாகவும், மோடி ஆட்சி அமைந்தால் நல்லாட்சி பிறக்கும் எனவும் பேசி வந்தார்.

இதனால் அவர் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது சசிகலா புஷ்பா முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி நாயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பாவும் இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்களும், விளையாட்டு பிரபலங்களும் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com