அதிமுக தமிழகத்தை என்றும் ஆள வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தங்கியிருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு சென்னை போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார். கார்டனில் செய்தியாளர்களிடன் பேசிய அவர், அதிமுக தமிழகத்தை என்றும் ஆள வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று கூறினார். என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது.மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அதிமுகவினர் பயணத்தை தொடரவேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்தார். நான் எங்கிருந்தாலும் கட்சிப் பணிகளையும் உங்களையும் பற்றி கேட்பேன் என அவர் கூறினார்.