\
அதிமுக கொடிகட்டிய காரில் வந்து மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி

அதிமுக கொடிகட்டிய காரில் வந்து மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி

அதிமுக கொடிகட்டிய காரில் வந்து மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி
Published on: 

மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா. 

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனனின் உடல் மருத்துவமனையில் இருந்து அதிகாலையில், தண்டையார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் மரியாதை செலுத்திய பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தினார் சசிகலா. பின்னர் மதுசூதனன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சசிகலா வந்தவுடன் சில அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மதுசூதனன் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/DRDtsbR8wv0" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com