\
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்
Published on

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 47.

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன். இவர் திருவிடைமருதூர் கோயிலுக்கு இன்று காலை சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒன்றுக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.

இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com