தமிழ்நாடு
சசிகலா முதல்வராகப் பதவியேற்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
சசிகலா முதல்வராகப் பதவியேற்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும். பதவியேற்க தாமதமாவது அரசியல் சட்டத்துக்கு புறம்பாக அமையும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.