ஜெயலலிதா இருந்தபோதே ஓரங்கட்டப்பட்டவர் சசிகலா - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா இருந்தபோதே ஓரங்கட்டப்பட்டவர் சசிகலா - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா இருந்தபோதே ஓரங்கட்டப்பட்டவர் சசிகலா - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஓரங்கட்டினார். மன்னிப்பு கேட்டதால் சசிகலாவை மட்டும் மீண்டும் சேர்த்துக் கொண்டார் என அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்துள்ள உய்யாலிகுப்பத்தில் ரூ16.80 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது...


அமமுக என்பது அதிமுக மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதாகவுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஓரங்கட்டினார். பின்னர், கட்சி விவகாரங்களில் தலையிடமாட்டேன் என மன்னிப்பு கேட்டதால், சசிகலாவை மட்டும் கட்சி விவகாரங்களில் முற்றிலும் தலையிடக்கூடாது என்ற கண்டிப்புடனும், உறுதிமொழி கடிதம் பெற்றுக்கொண்ட பின்னரே தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

சசிகலா அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது என்பது சட்டரீதியாகவும் நடைபெறாது. அதிமுக அலுவலகம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. அவருடைய சொத்துகள் அனைத்தும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தம். தேமுதிக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அமமுகவுடன் கூட்டணி அமையும் என கருத்து தெரிவித்திருப்பது அவரின் விருப்பம். இதன்மூலம், அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை எனக்கூற முடியாது.

பாமகவுடன் கூட்டணி என்பது நிர்பந்தம் எனக்கூற முடியாது. அதிமுகவுடன் பாமக, தேமுதிக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும். அமமுக மற்றும் திமுக கூட்டணி அமைத்தும் செயல்படலாம் அல்லது திமுகவின் பி டீம் ஆக இயங்கலாம். ஆனால், எந்த கூட்டணி அமைந்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த முடியாது" என அமைச்சர் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com